முக்கியச் செய்திகள் சினிமா

விமல் – யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

விமல், யோகி பாபு நடிக்கும் புதிய படத்தை பிரபல இயக்குநர் அப்துல் மஜீத் அதிக பொருட்செலவில் தயாரித்து இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய் நடித்த “தமிழன்” மற்றும் துணிச்சல், டார்ச் லைட் போன்ற பல வெற்றிப்படத்தை இயக்கியவர் அப்துல் மஜீத். இவர் தற்போது விமல், யோகி பாபு நடிக்கும் புதிய படமொன்றை அதிக பொருட்செலவில் தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று உலகமே புரோக்கர் மயமாகிவிட்டது. அதில் சில புரோக்கர்கள் சுயநலத்தோடு தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட,  ஆக்‌ஷன், ரொமான்ஸ் கலந்து ஜனரஞ்ஜகமாக இப்படம் சொல்கிறது.

கதாநாயகன் விமலுக்கு ஜோடியாக சாம்பிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் என பெரிய  நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றது.

இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும், அதன் சுற்றுபுறங்களிலும்  நடந்து முடிந்துள்ள நிலையில், கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் அரண்மனை போன்ற அமைப்பு கொண்ட இடங்களில் படமாக்கப்பட உள்ளது.

கான்ஃபிடன்ட் பிலிம் கேஃபே (Confident Film Cafe) சார்பில் இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து டைரக்டு செய்கிறார் அப்துல் மஜீத். வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் மற்றும் ஆடியோ வெளியிடப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சச்சி சாரின் வாக்கு பளித்தது – பழங்குடியினப் பெண் நஞ்சம்மா நெகிழ்ச்சி

Web Editor

வீடியோ வெளியிட்டு உயிரிழப்பு செய்துகொண்ட நபர்!

Jeba Arul Robinson

முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு- அரசாணை வெளியீடு

G SaravanaKumar