தூண்டில் வளைவு அமைக்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்!

இரையுமன்துறை கடற்கரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்க கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டம் இரையுமன் துறை கடற்ரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்கக் கோரி இறையுமன் துறை கடற்கரை கிராம…

இரையுமன்துறை கடற்கரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்க கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமாரி மாவட்டம் இரையுமன் துறை கடற்ரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்கக் கோரி இறையுமன் துறை கடற்கரை கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கிராம மக்கள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.  இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உடல் நிலை சோர்வடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.

—-அனகா  காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.