கிராம உதவியாளர் உயிரிழப்பு முயற்சி!

கடலூரில் விஏஓ மீது புகார் தெரிவித்து தாசில்தாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கிராம உதவியாளர்உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த மாரியம்மாள், பாதிரிக்குப்பம் விஏஓ அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.…

கடலூரில் விஏஓ மீது புகார் தெரிவித்து தாசில்தாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கிராம உதவியாளர்உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த மாரியம்மாள், பாதிரிக்குப்பம் விஏஓ அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிதேவிக்கும் பணியின்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இதில் விரக்தியடைந்த, மாரியம்மாள் தூக்க மாத்திரை சாப்பிட்டு, உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாரியம்மாள் உயிரிழப்பு
செய்து கொள்வதற்கான காரணம் குறித்து தாசில்தாருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், விஏஓ லட்சுமிதேவி, தன்னை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வழக்கமாக அமரும் இடத்தில் அமர அனுமதிக்காமல், மறைவாக அமரக்கூறி நாற்காலியை தூக்கி எறிந்ததால் மனமுடைந்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.