விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு…வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடியில் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார்.…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடியில் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் டி.கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பளிப்பதற்காக வரிசையில் நின்றுக் கொன்றிருந்த பெண்ணை ஒருவர் கத்தியால் குத்திவிட்டி தப்பி ஓட முயன்றுள்ளார்.  இதில் காயமடைந்த அந்த பெண் அலறியுள்ளார்.  அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அந்த பெண்ணின் முன்னாள் கணவர் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து அவர் வாக்களித்தார். பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பெண்ணின் முன்னாள் கணவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.