தமிழ் சினிமாவின் தளபதி விஜயின் 48வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்து மீடியாக்களிலும் விஜய் பற்றியான கட்டுரைகளும், செய்திகளும், வீடியோக்களும், mashup-களும் நேற்று முதலே அலங்கரிக்க தொடங்கிவிட்டன. இதற்கிடையில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் விஜயின் 66வது படத்தின் டைட்டிலும் first look-ம் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தை கொடுத்தது. கடந்த சில நாட்களாகவே இப்படத்திற்கு வாரிசு என தலைப்பிடப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், அந்த டைட்டில் வேண்டாம் என விஜய் ரசிகர்கள் பலருமே இணையத்தில் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.
https://twitter.com/actorvijay/status/1539224409721823232
இந்நிலையில் வாரிசு என்றே டைட்டில் இடப்பட்டு வந்த first look-ஐ மனதை தேற்றிக்கொண்டு மனதார ஏற்றுகொண்டு ட்ரெண்ட் செய்து கொண்டிருந்தனர் விஜய் ரசிகர்கள். வழக்கம் போலவே விஜய் வெறுப்பாளர்கள் பலரும் வேலாயுதம் படத்தில் வரும் லொல்லு சபா மனோகர் போல குறுக்கே புகுந்து ‘ஆமாமா விஜய் வாரிசு நடிகர் தானே’ என படு பயங்கரமாக காமெடி செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர். இன்னொருபக்கம் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்கத் தகுந்த டைட்டில்களில் படம் வெளியிட்ட அஜித்தின் ரசிகர்களோ வாரிசு படத்தின் டைட்டில் படுமொக்கையாக இருப்பதாக கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிசருக்கிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
இவர்களையெல்லாம் தாண்டி குறியீட்டு ஆய்வாளர்கள் என்கிற விசித்திர பிரிவினர் உள்ளனர். எந்த போஸ்டர், படம் வெளியானாலும் உடனே அதேபோலானதொரு போஸ்டரையோ, புகைப்படத்தையோ எங்கிருந்தாவது தோண்டியெடுத்து கொண்டுவந்து இது காப்பி என கம்பி கட்டத் தொடங்கிவிடுவார்கள். அந்த வகையினர் இந்த first look-ல் இருக்கும் விஜயின் தலைக்கு பதிலாக துல்கர் சல்மானின் தலையை வெட்டி ஒட்டி ஒரு போஸ்டரை உருவாக்கி அதை பார்த்து தான் வாரிசு போஸ்டர் காப்பியடிக்கப்பட்டிருப்பதாக ஒரு அப்பத்தை சுட்டு கொண்டு வந்தார்கள். காதல் கொண்டேன் படத்தில் கெட்டுப்போன உப்புமாவை திண்ணும் தனுஷ் போல அதையும் எடுத்து அகால காமெடி செய்துகொண்டிருந்தனர் சில விஜய் வெறுப்பாளர்கள்.
இருந்தாலும் போஸ்டர் இன்னும் கொஞ்சம் நல்லாவே இருந்திருக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் பலரே முனுமுனுத்தது படக்குழுவினருக்கு கேட்டிருக்கும் போல, second look எப்ப வரும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு, ‘நாளைக்கே செஞ்சிட்டா போச்சி’ என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக ட்வீட் வந்து விழுந்தது. இதனைத்தொடர்ந்து இன்று காலை கலர் ஃபுல்லான அந்த second look-ஐ கொளுத்திப்போட்டது படக்குழு. வண்டி ஒன்றில் மா, பலா, வாழை, கட்டுக்கரும்பு, மக்காச்சோளம், பூசணிக்காய், இளநீர், வெங்காயம், முருங்கைக்காய் ஆகிய பொங்கல் சீர்களுடன் பலூன், பட்டங்களுடன் குழந்தைகள் பலரும் கள்ளம் கபடமற்ற குதூகல சிரிப்போடு அமர்ந்திருந்தார்கள். அந்த சிறுவர்களுக்கு நடுவே சச்சின் படத்தில் வந்த ஜாலியான சாக்லேட் பாய் போல் தனக்கே உரிய க்யூட்டான சிரிப்புடன் விஜய் படுத்திருப்பது போலான அந்த போஸ்டர் ஹார்டின்களை பக்கெட் பக்கெட்டாக அள்ளி வருகிறது.
https://twitter.com/actorvijay/status/1539491923937075200
இதைக்கண்ட கம்பிக்கட்டும் குறியீட்டு ஆய்வாளர்கள் பலரும், இது சந்திரமுகி படத்தில் வரும் ரஜினியின் போஸில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது எனக்கூறி நகைச்சுவை விருந்தை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விஜய் ரசிகர்கள், ‘இருவரும் மல்லாந்து கால் மேல் கால் போட்டு படுத்திருக்கிறார்கள் என்பதை தாண்டி இரண்டிற்கும் ஒரு ஒற்றுமையும் இல்லை.
ஆக இவர்கள் கூற்றுப்படி சினிமாவில் ஒருமுறை ஒருவர் மல்லாந்து படுத்து போஸ் கொடுத்தால் அதன் பிறகு யாருமே அந்த position-ல் படுக்கக்கூடாது, பாறையில் மல்லாந்து படுத்த யோகாஜியை போல் வித்தியாச வித்தியாசமாக படுத்தால் தான் ஏற்றுக்கொள்வார்களாம்’ எனக்கூறி அவர்களின் கண்டுபிடிப்புக்கு ஜோராக கைத்தட்டி வருகின்றனர்.
https://twitter.com/actorvijay/status/1539571932378517504
இந்நிலையில் second போஸ்டரை பார்த்து திக்குமுக்காடி போயிருந்த ரசிகர்களுக்கு அடுத்த சில மணி நேரத்திலேயே அடுத்த போஸ்டரை வெளியிட்டு அமர்களம் செய்தது படக்குழு. விஜய் பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் அந்த போஸ்டருக்கு fire-களை பறக்கவிட்ட இணையவாசிகளும் விஜய் ரசிகர்களும் இதையல்லவா முதலில் வெளியிட்டிருக்க வேண்டும் எனக்கூறி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த போஸ்டர் எதன் காப்பியாக இருக்கும் என தேடும் பணியில் அந்த கம்பிகட்டும் பணியாளர்கள் இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வணக்கம்!
- வேல் பிரசாந்த்









