முக்கியச் செய்திகள் சினிமா

“நடுத்தர வர்க்கத்தின் மனநிலை பிடிக்காது” – விஜய் தேவரகொண்டா பேட்டி

வெற்றியை தக்க வைக்க  என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பிரபல தெலுங்கு நடிகர்  விஜய் தேவரகொண்டா பேட்டி அளித்துள்ளார். 

எவடு சுப்ரமணியம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார். நோட்டா, டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் என இவர் நடித்த திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன. சமீபத்தில் இவர் நடித்துள்ள  லைகர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் லைகர் திரைப்படத்தை விளம்பரப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அவர், மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த பெண்கள் யார்?

என் வாழ்க்கையில் என் அம்மாவும், பாட்டியும் முக்கியமான அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் எனக்கு கிடைத்த பொக்கிஷம். அவர்கள் எனக்கு மிகவும் துணையாக இருப்பதோடு, நிறைய அன்பையும் தருகின்றனர்.

உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள், இப்போது யாருடன் டேட்டிங்கில் இருக்கிறீர்கள்?

என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. நான் யாருடன் காதலில் இருந்தாலும் அவர்களின் தனியுரிமையை பாதுகாப்பேன்.

வெற்றியை தக்கவைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

நான் என் புகழை தக்கவைத்து கொள்ள காரணம் நான் என் தொழிலை மிகவும் நேசிக்கிறேன், அதுவும் என்னை நேசிக்கிறது. நான் நடிப்பதை விட மாட்டேன். தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன்.

உங்களுடைய உத்வேகம் என்ன?

பணம் மற்றும் மரியாதையை சம்பாதிக்கணும். அங்கீகாரம் முக்கியம். எனக்கு நடுத்தர வர்க்கத்தின் மனநிலை பிடிக்காது. ஏனென்றால் நான் அதிலிருந்து தான் வந்தேன். அந்த மனநிலையை எதிர்த்து போராட வேண்டும் என்றும் முன்னேற வேண்டும் என்றும் விரும்புகிறேன். வாழ்க்கையில் எனக்கான ஒரு தனிப் பாதையை உருவாக்கி பின்பற்றுகிறேன்.

– பவானி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் நடிக்கவுள்ளாரா விஜய்?

EZHILARASAN D

செஸ் வீராங்கனை ஹரிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

Web Editor

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

EZHILARASAN D