நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய விஜய் தேவரகொண்டா

  நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அவரது தோற்றமும், நடிப்பும் கல்லுரி…

 

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார் விஜய் தேவரகொண்டா

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அவரது தோற்றமும், நடிப்பும் கல்லுரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. அர்ஜுன் ரெட்டி கதாப்பாத்திரத்தை போலவே ரசிகர்கள் தங்களின் சிகை, தோற்றங்களை மாற்றிக்கொண்டனர்.

தற்போது விஜய் தேவரகொண்டா லைகர் என்ற படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கி வருகிறார். விஜய் தேவரகொண்ட உடன் உலக புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரரான மைக் டைசனும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படபிடிப்பு தளத்தில் மைக் டைசனுடன் விஜய் தேவரகொண்ட இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த நிலையில் நிர்வணமாக விஜய் தேவரகொண்ட இருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

சிக்ஸ் பேக் உடலுடன் நிர்வாணமாக ஒரு பூங்கொத்தை மட்டும் வைத்திருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைகர் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் படத்தின் புரோமோஷனுக்காக இப்படி எல்லாம் புகைப்படம் வெளியிடலாமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.