ஓய்வுக்காக வெளிநாடு சென்ற விஜய்.. வைரலாகும் வீடியோ !

நடிகர் விஜய் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு முன், ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார்.  நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில்…

நடிகர் விஜய் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு முன், ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். 

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். ‘லியோ’ படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்துகட்ட பணிகள் துவங்கியுள்ளன. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்குப் பின், விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘சிஎஸ்கே’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் தொடர் படப்பிடிப்புகளுக்குப் பிறகு நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.