நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி – உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

நடிகர் விஜய்க்கு உதவி கேட்டு கடிதம் எழுதிய மூதாட்டி சரஸ்வதிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கி உதவியுள்ளனர். நடிகர் விஜய்க்கு பட்டி தொட்டி முதல் சிட்டி வரை…

நடிகர் விஜய்க்கு உதவி கேட்டு கடிதம் எழுதிய மூதாட்டி சரஸ்வதிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கி உதவியுள்ளனர்.

நடிகர் விஜய்க்கு பட்டி தொட்டி முதல் சிட்டி வரை சிறுவர்கள், பெரியவர்கள் என ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். நடிகர் விஜய்யின் 73 வயது ரசிகை ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன் உதவி வேண்டி அவருக்கு எழுதிய கடிதத்தை, விலாசம் தெரியாமல் இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி. 73 வயதான இவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து குடும்பத்துடன் மோகனூருக்கு வந்துள்ளார். கணவர் இறந்ததால் கடந்த 16 ஆண்டுகளாக மோகனூரில் உள்ள வாடகை வீட்டில் தனிமையில் வசித்து வரும் சரஸ்வதிக்கு, திருமணம் ஆகி சென்ற அவரின் மூன்று மகன்கள் அவ்வப்போது உதவி செய்துள்ளனர்.

இந்நிலையில், மூதாட்டிக்கு திடீரென கண்பார்வை மண்கத் தொடங்கியுள்ளது. மேலும், சாப்பாட்டுக்கு கூட பணமில்லாமல் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் தனது பாட்டி சிரமப்படுவதை அறிந்த மூத்த பேரன் சதீஷ்குமார், பாட்டியை தனது வீட்டிற்கு அழைத்து வரும்போது, நடிகர் விஜய்யிடம் உதவி கேட்டு பாட்டி எழுதிய கடிதம் கண்ணில் பட்டிருக்கிறது.

அண்மைச் செய்தி: சென்னை மயிலாப்பூரில் வியாபாரியை வெட்டி விட்டு தப்பிய ஓடிய மர்ம கும்பல்

3 ஆண்டுகளுக்கு முன்பு, தான் எழுதிய கடிதத்தை விஜய்யின் முகவரி தெரியாததால் இன்று வரை அனுப்பாமல் தன்னிடமே பத்திரமாக வைத்திருக்கிறார் மூதாட்டி சரஸ்வதி. மூதாட்டி சரஸ்வதி, நடிகர் விஜய்க்கு எழுதியுள்ள இந்த கடிதம் குறித்த செய்தி நியூஸ் 7 தமிழில் செய்தியாக வெளிவந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், ரூ.5000 ரொக்கப்பணம், சேலைகள் முதலியவற்றை மூதாட்டி சரஸ்வதிக்கு வழங்கி உதவி செய்தனர்.

  • – தீபா, மாணவ ஊடகவியலாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.