இன்று மாணவர்களை சந்திக்கும் விஜய்; வெறும் சந்திப்பா ?… அடுத்த தலைமுறை வாக்காளர்கள் சந்திப்பா?…

மாணவர்களை சந்திக்கும் விஜய்…. வெறும் மாணவர்கள் சந்திப்பா ? இல்லை அடுத்த தலைமுறை வாக்காளர்கள் சந்திப்பா?… விரிவாக பார்க்கலாம்.  தமிழ்நாடு அரசியலுக்கும் திரைத்துறைக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு. 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா…

மாணவர்களை சந்திக்கும் விஜய்…. வெறும் மாணவர்கள் சந்திப்பா ? இல்லை அடுத்த தலைமுறை வாக்காளர்கள் சந்திப்பா?… விரிவாக பார்க்கலாம். 

தமிழ்நாடு அரசியலுக்கும் திரைத்துறைக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு. 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் இன்றுவரை தமிழ்நாடு அரசியல் களத்தில் திரைத்துறை சாராத முதலமைச்சர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகிய முதலமைச்சர்கள் திரைத்துறையில் கால்பதித்தவர்கள்தான்.

 

அந்த வகையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு அரசியல் களத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வரும் அவர், கடந்த மே மாதம் 28ஆம் தேதி உலக பசி தினத்தை ஒட்டி 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் மதிய உணவு வழங்கினார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். அந்த வகையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டார்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளதாகவும், அவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய்யே நேரில் சந்தித்து பரிசுகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (ஜூன்  17) 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குவார் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த சந்திப்பு வெறும் மாணவர்கள் சந்திப்பா இல்லை அடுத்த தலைமுறை வாக்காளர்கள் சந்திப்பா என்ற கேள்வி பலரிடம் எழுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.