மீண்டும் தெலுங்கு சினிமாவில் வில்லனாகும் விஜய்சேதுபதி – RC16 குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

உப்பன்னா திரைப்படத்தை தொடர்ந்து, மீண்டும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் ராம்சரணுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடிகர்  ராம்சரண் தனது 16வது திரைப்படத்தை நோக்கி தனது பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த…

உப்பன்னா திரைப்படத்தை தொடர்ந்து, மீண்டும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் ராம்சரணுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடிகர்  ராம்சரண் தனது 16வது திரைப்படத்தை நோக்கி தனது பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் வெளியான உப்பன்னா என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் புஜ்ஜி பாபு சனா தற்பொழுது இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் விளையாட்டை கதைக்களமாக கொண்டு உருவாவதாக தகவல்கள் வெளிவருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், தற்பொழுது இந்த திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி  ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் நீண்ட இடைவெளிக்கு பின் கழித்து தெலுங்கு திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் ஏ.ஆர். ரகுமான். 1992ம் ஆண்டு மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக களம் இறங்கியதில் இருந்து, சுமார் 21 ஆண்டுகளில் அவர் இசையமைக்கவிருக்கும் ஆறாவது தெலுங்கு திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான கோமரம் புலி திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
படத்தின் நாயகியாக மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்து வருகிறது. மாஸ்டர், விக்ரம்,  ஜவான் திரைப்படங்களைத்தொடர்ந்து ராம்சரண்16 என்று தற்போதைக்கு  பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் விரைவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.