மாமனிதன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது! மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்வதேச திரைப்படவிழாவில் அங்கீகாரம்!

மராட்டிய மாநிலத்தில் பூனா தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில் நடைபெற்ற 5வது குளோபல் இந்தியா பன்னாட்டு திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான  விருது வழங்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில்…

மராட்டிய மாநிலத்தில் பூனா தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில் நடைபெற்ற 5வது குளோபல் இந்தியா பன்னாட்டு திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான  விருது வழங்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இத்திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். இப்படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

மாமனிதன் திரைப்படம் வெளியானபோது பெரிதாகப் பேசப்படவில்லை. 40% பார்வையாளர்களால் மட்டுமே திரையரங்கில் பார்க்கப்பட்டது. ஆனால் ’ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியான பின்னர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் படத்தைப் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் நேர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருவதால் இப்படத்தின் மீதான ஆவல் திரைரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.

இந்நிலையில், மாமனிதன் திரைப்படம், ட்ரீம் கேட்சர் மற்றும் அர்பா சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு, விருதுகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் பூனா தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில் நடைபெற்ற 5வது குளோபல் இந்தியா பன்னாட்டு திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு ‘சிறந்த நடிகர்’ விருது தரப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாமனிதன் திரைப்படத்தின் இயக்குனர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/seenuramasamy/status/1677925825717628930?t=Ca9cQsMdPio0g4cuD7LFBA&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.