விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் – இன்று அறிவிக்க வாய்ப்பு!

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  அதன் பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய்…

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  அதன் பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.  விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்கிற app தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு app நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.  விஜய் மக்கள் இயக்கம்,  புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என தகவல் வெளியானது.  இந்நிலையில், நடிகர் விஜய் கட்சியின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில்,  1 கோடி உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சியின் பெயர் எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.  அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்து கட்சி உறுப்பினர்கள்,  தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்லி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.