36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

வாரிசு படத்தின் புதிய அப்டேட், ரெடியா நண்பா..

வாரிசு திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை விஜய் பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் நடிக்கும் 66வது படமான வாரிசு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கில் இந்த படத்திற்கு வாரசடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. வாரிசு படத்தின் படபிடிப்பு இரண்டு கட்ட படபிடிப்பு நிறைவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படபிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.

வாரிசு திரைப்படம் பற்றிய அப்டேட்கள் எதுவும் வெளியாகமல் இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு வெளியான விஜய் படங்களை போலவே இந்த படத்திலும் விஜய் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு விஜய் பாடிய பாடல்கள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே போல வாரிசு படத்திலும் விஜய் குரலில் பாடல் ஒன்றை பாட வைக்க இயக்குனர் வம்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேக் லிரிக்ஸ் எழுத உள்ளார். இதற்கு முன்பு விவேக் எழுதிய பாடல்களை விஜய் பாடி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் இதே காம்போ இணைந்து புதிய பாடலை விஜய் பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புதிய அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் தன் சொந்த குரலில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading