விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் கதாநாயகன் யார்?

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கவின் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அண்மையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதற்கான ஒப்பந்தத்தில்…

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கவின் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அண்மையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களும் வெளியானது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.  முதலில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமின் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சஞ்சய் அறிமுக இயக்குநர் என்பதால் பிரபல இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தால் தான் படத்தின் மார்க்கெட் உயரும் என தயாரிப்பு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் படத்திற்கு நாயகனாக நடிகர் கவினை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா படத்தின் வெற்றிக்குப் பின் கவினுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளதால் அவரை தேர்வு செய்ய ஜேசன் சஞ்சய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் “நா அடிச்சா தாங்க மாட்ட” பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சத்தமில்லாமல் படிப்புக்காக வெளிநாடு சென்றார்.

பின்னர் அவரை நடிக்க வைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றன. இதற்காக அல்போன்ஸ் புத்திரன் கதையும் சொன்னார். ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.