முக்கியச் செய்திகள் சினிமா

விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை

விஜய் சொகுசு கார் மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொகுசு கார் தொடர்பான வழக்கில், நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை என்றும், வரி செலுத்த தயாராக உள்ளதாகவும், வரிச்சலுகையை மட்டுமே எதிர்ப்பார்க்கிறோம் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது என்றும், நடிகர் என்பதால் தனக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் நடிகர் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, நீதிமன்றத்தை நாடியதற்காக தனக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை நீக்க வேண்டும் என்றும், வணிக வரித்துறை விதிக்கும் வரியை ஒரு வாரத்தில் செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துடன், ஒரு லட்சம் ரூபாய் அபாரத்திற்கும் தடை விதித்தனர். மேலும், 80 சதவீத நுழைவு வரியை, நடிகர் விஜய் ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது : தமிழக அரசு!

Ezhilarasan

2வது நாளாக 33 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு!

Vandhana

அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!

Halley karthi