புதிய தோற்றத்தில் #Vijay! வைரலாகும் புகைப்படம்!

கோட் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் மகத்தின் மனைவி பிராச்சி வெளியிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், இன்று திரைக்கு வந்துள்ள படம் ‘தி கோட்’. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின்…

கோட் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் மகத்தின் மனைவி பிராச்சி வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், இன்று திரைக்கு வந்துள்ள படம் ‘தி கோட்’. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் இப்படத்தில் பல தோற்றங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் மகத்தின் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஜய் புதிய தோற்றத்தில் உள்ளார். இந்தப் படத்தில் ஹாலிவுட்டில் பிரபலமான வுல்வரின் தோற்றத்தில் நடிகர் விஜய் இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.