மணமக்களுக்கு தக்காளி பரிசளித்த விஜய் ரசிகர்கள்

தக்காளி விலை உயர்வை உணர்த்தும் வகையில் கோவையில் திருமண விழாவில் பங்கேற்ற விஜய் ரசிகர்கள் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கியுள்ளனர். தக்காளியின் விலை கடந்த சில தினங்களில் கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ.120…

தக்காளி விலை உயர்வை உணர்த்தும் வகையில் கோவையில் திருமண விழாவில் பங்கேற்ற விஜய் ரசிகர்கள் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கியுள்ளனர்.

தக்காளியின் விலை கடந்த சில தினங்களில் கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ.120 வரை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை பொதுமக்களை திக்குமுக்காடச் செய்துள்ள நிலையில், கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக அளித்து மணமக்களை ஆச்சரியப்பட வைத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளராக இருப்பவர் ஹக்கீம். இவரது மகளான அப்சானாவிற்கும், ஹாரீஸ் என்பவருக்கும் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமக்களும் அங்கு கூடியிருந்தவர்களும் வியப்பின் உச்சிக்கு சென்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.ஏற்கனவே கடந்த முறை தக்காளி விலை உயர்வின் போதும் விஜய் ரசிகர்கள் இதே போல மணவிழாவில் தக்காளி பரிசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.