விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா திருமண வரவேற்பு பத்திரிக்கை இணையத்தில் வைரல்…….!

நடிகர் விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேற்பு பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் காலங்களில் தென்னிந்திய திரையுலகில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட ஜோடியென்றால் அது விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா ஆவர். கீதா கோவிந்தம் (2018), மை டியர் காம்ரேட் (2019) ஆகிய படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக திரை வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனாலும் விஜய் – ரஷ்மிகா ஜோடி இதனை பொது வெளியில் ஒப்புகொள்ள வில்லை. இருந்த போதிலும் இருவரும் காதலிப்பதாகவே ரசிகர்கள் கூறி வந்தனர்.

அண்மையில் கூட இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இருவருக்கும் பிப்,. 26 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்டிருப்பதாக கூறப்படும் இத்திருமணம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் நடைபெற உள்ளதாகவும் ஹைதராபாத்தில் மார்ச் 4 ஆம் தேதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த சூழலில் நடிகர் விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.