ரசிகைகளின் கோரிக்கைக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா கமெண்ட் செய்தால்தான் படிப்போம் என கூறிய இளம் ரசிகைகள் இருவரின் கோரிக்கையை நடிகர் விஜய் தேவரகொண்டா நிறைவேற்றியுள்ளார்.  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது…

விஜய் தேவரகொண்டா கமெண்ட் செய்தால்தான் படிப்போம் என கூறிய இளம் ரசிகைகள் இருவரின் கோரிக்கையை நடிகர் விஜய் தேவரகொண்டா நிறைவேற்றியுள்ளார். 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது ரசிகர் பட்டாளம் மிகப்பெரியது. அதிலும் குறிப்பாக பெண் ரசிகர் பட்டாலம் மிகப்பெரியது. பொதுவாக தனக்கு பிடித்த ஹீரோக்கள், ஹீரோயின்களை பார்க்க வேண்டும், அவர்களோடு பேச வேண்டும் என ரசிகர்களுக்கு ஆசை இருக்கும்.

அந்த வகையில் விஜய் தேவரகொண்டாவின் இளம் ரசிகைகள் இருவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ‘தோழி ஒருவள் தனது சக தோழிக்கு முத்தமிட்டு, இந்த வீடியோவிற்கு விஜய் தேவரகொண்டா கமெண்ட் செய்தால், நாங்கள் எங்கள் தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்போம்’ என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் பதிலளித்துள்ளார். ‘தேர்வில் 90% பெறுங்கள். நான் உங்களை சந்திக்கிறேன்’ என கமெண்ட் செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிப்ரவரி 15 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகிறது. விஜய் தேவரகொண்டாவின் பதில் 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. இந்த வீடியோவிற்கு பயனர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.