விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் கொலை திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டி வருகிறது.
Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க பாலாஜி K குமார் எழுதி இயக்கும் படம் கொலை. இந்த படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ராதிகா சரத்குமார், ரித்திகா சிங், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான கொலை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக இந்த மோஷன் போஸ்டர் அமைந்துள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆண்டனி இந்த படத்திலும் வித்தியாசமான கதையையே தேர்வு செய்திருப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
நடிகர் முரளி சர்மா தி ஏஜென்ட் ஆதித்யா கதாப்பாத்திரத்திலும், தி பாய்பிரண்ட் சதீஷ் கதாப்பாத்திரத்தில் சித்தார்த்த ஷங்கரும், தி பாஸ் ரேகா கதாப்பாத்திரத்தில் ராதிகா சரத்குமாரும், தி காப் – மன்சூர் அலி கான் கதாப்பாத்திரத்தில் ஜான் விஜய்யும், அப்ரண்டிஸ் சந்தியா கதாப்பாத்திரத்தில் ரித்திகா சிங்கும், துப்பறியும் விநாயக் கதாப்பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராகவும், K ஆறுசாமி கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.
– தினேஷ் உதய்







