கரிநாள் அன்று யாராவது பதவியேற்றுள்ளார்களா? – கார்த்தி சிதம்பரம் கேள்வி

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபடுகிறார். கரிநாள் அன்று யாராவது பதவியேற்றுள்ளார்களா? என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமைச் செயலகத்தில்…

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபடுகிறார். கரிநாள் அன்று யாராவது பதவியேற்றுள்ளார்களா? என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா வெற்றி பெற வேண்டும். எல்லா பள்ளிகளிலும் ஆற்றுப்படுத்தும் அலுவலர் நியமிக்க வேண்டும். மனநிலை சார்ந்த பிரச்சினைகளை இந்தியாவில் புறக்கணிக்கின்றோம். மன உளைச்சல் எல்லா தரப்பு மக்களுக்கும் வரக்கூடிய வாய்ப்புள்ளது.

இந்தியாவின் அரசியல் சாசனத்தையே சிதைக்கின்றது பாஜக. அமலாக்கத் துறையில் வல்லுனர் நான் தான். 20 முறை சம்மன் செய்துள்ளனர். அடுத்த முறை சம்மன் செய்யும்போது லைவ் செய்ய வேண்டும். கிரில்லிங், கிடுக்கிப்பிடி என வெளியில் பயன்படுத்துகிறார்கள். நேரத்தையே வீணடிக்கிறார்கள். பாராளுமன்றத்தின் மேலே சிங்கங்களை வைக்கும்போது பூஜை நடத்தினார்கள், யாரையும் அழைக்கவில்லை. தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபடுகிறார். தமிழ்நாட்டில் யார் பதவியேற்றாலும் நல்ல நேரம் பார்த்துதான் பதவியேற்கின்றனர்.

ஜார்ஜ் கோட்டை வாசலில் இருந்தே சொல்கிறேன் கரிநாள் அன்று யாராவது பதவியேற்றுள்ளார்களா?. திராவிட மாடலை சமூக மாடலாக ஏற்றுக் கொள்கிறேன். பொருளாதார மாடலா என்பதை விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தன்னுடைய குரலை இன்னும் வேகமாக, சத்தமாக ஒலிக்க வேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.