முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் புற்றுநோயுடன் போராடும் தாய்க்கு ஆதரவாக, தனது தலையை மொட்டையடித்த வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
புற்றுநோய் மனித குலத்தின் எதிரியாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் மற்றவர்களிடம் பெறும் ஆதரவே உறுதுணையாக இருக்கும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களின் வாழ்க்கையை கொஞ்சம் எளிதாக்குவதற்கும், அவர்களுக்கு ஆதரவாகவும் சில சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த அனைத்து உதவியையும் செய்து வருகின்றனர்.
புற்றுநோய் வந்தவர்களுக்கு அளிக்கப்படும் ஹீமோதெரபி போன்ற சிகிச்சைகளால் அவர்கள் முடி கொட்டும். இதனால் அவர்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடித்து கொள்வார்கள். அது போல முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயின் தலைமுடியை மொட்டையடிக்கிறார். பின் தனது அம்மாவுக்கு ஆதரவாக தானே தனது தலையை மொட்டையடிப்பதையும் அவரது நண்பர்களும் சேர்ந்து மொட்டை அடித்துக்கொண்டு உணர்ச்சி பூர்வமாக அவர் தாய்க்கு ஆதரவளிக்கும் காட்சி இணைய தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
“யாரும் தனியாகப் போராடவில்லை. இந்த முடிதிருத்தும் தொழிலாளி புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தனது தாய்க்கு ஆதரவாக தலையை மொட்டையடிக்கிறார். அவரது நண்பர்களும் பணிபுரியும் சக ஊழியர்களும் சேர்ந்து தாயை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.” என்று இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
https://twitter.com/GoodNewsMVT/status/1655749637171560451
தனக்கு ஆதரவாக தனது மகனும், அவரது நண்பர்களும் செய்த இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை கண்ட தாயார், உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடும் காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும் விதமாக உள்ளது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.







