திருவாரூரில் திரையிட இருந்த ஃபர்கானா திரைப்படம் ரத்து செய்யப்பட்டது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பர்கானா திரைப்படம் நேற்று வெளிவந்தது. தமிழ்நாடு முழுவதும் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், திருவாரூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரைப்படத்தை திரையிடக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் திரையரங்கு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் திரையரங்கு நிர்வாகம் பர்கானா திரைப்படம் ரத்து செய்யப்படுவதாக நோட்டீஸ் ஒட்டியது. இப்படத்தை பார்க்க வந்த ஒரு சிலரும் நோட்டீஸை பார்த்து திரும்பி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-அனகா காளமேகன்






