கிரிக்கெட் வீரர் டோனி விமானத்தில் கேண்டி க்ரஷ் (candy crush) விளையாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
நாம் அனைவரும் குழந்தை பருவத்தில் கண்டிப்பாக கேண்டி க்ரஷ் விளையாடி மகிழ்ந்திருப்போம். அதற்காக பெற்றோரிடம் செல்போன் கேட்டு அடம் பிடித்திருப்போம். தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கவில்லை என்றால் எப்ப பார்த்தாலும் விளையாட்டுதான் என பெற்றோரிடம் டோஸ் கிடைத்திருக்கும். இந்த அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும். பின்னர் படிப்பு வேலை என காலங்கள் மாறும்போது விளையாட்டு மீதான ஆர்வமும் மெல்ல மெல்ல நம்மை விட்டு சென்றிருக்கும்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி கேண்டி க்ரஷ் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. விமானத்தில் இருக்கையில் அமர்ந்துள்ள டோனி தன்னுடைய டேப்பில் கேண்டி க்ரஷ் விளையாடுகிறார். அப்போது அங்கு வரும் விமானப் பணிப்பெண் அவருக்கு தட்டிடல் ஸ்வீட் வழங்குகிறார். அதில் சாக்லேட் எடுத்துக்கொள்ளும் டோனி அந்த பணிப்பெண்ணிடம் சிரித்தப்படி மகிழ்ச்சியாக நன்றி தெரிவிக்கிறார். முப்தால் வோரா என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.







