நாடாளுமன்றதேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தேமுதிக கட்சி பிரமுகர் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் அதிகரித்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடந்தது உண்மையா என உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமலாக்கத்துறை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனை அமைச்சருக்கு மட்டும் தனியார் மருத்துவமனையா? என கேள்வியெழுப்பினார். அவர் தமிழக முதல்வர் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு எந்த தொழிலைக் கொண்டுவந்தார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் நிர்வாக சீர்கேட்டைக் காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.







