குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாத மைத்துனர் -மாமியாரை தாக்கிய கணவரின் வீடியோ வைரல்!

கடலூரில் குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாத மைத்துனர் மற்றும் மாமியாரை கட்டையால் தாக்கிய கணவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சென்னை நுகர் பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றி வரும் சுமன்ராஜ் என்பவர்…

கடலூரில் குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாத மைத்துனர் மற்றும் மாமியாரை
கட்டையால் தாக்கிய கணவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி
வருகின்றது.

சென்னை நுகர் பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றி வரும் சுமன்ராஜ் என்பவர்
கடலூரை சேர்ந்த வினோதினியை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தன்னை கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு அவரை பிரிந்து கடலூர் சுனாமி நகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடலூருக்கு சென்ற கணவர் சுமன் ராஜ், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்புமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வினோதினியை அனுப்ப முடியாது என அவரது மாமியார் வாசுகி மற்றும் மைத்துனர் வெங்கடேசன் கூறியதால், ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த் கட்டையை கொண்டு இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், படுகாயம் அடைந்த வாசுகி மற்றும் வெங்கடேசன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.