ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 6…

ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் படி பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியல் :

நந்தகோபால் – வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பக ஆணையர்

ரஷ்மி சித்தார்த் – சென்னை மாவட்ட ஆட்சியர்

அருணா – நீலகிரி மாவட்ட ஆட்சியர்

அம்ரித் – நில நிர்வாக இணை ஆணையர்

ஹனீஸ் சாப்ரா – தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர்

சித்ரா விஜயன் – தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்ட தலைமைச் செயல் அதிகாரி

https://twitter.com/news7tamil/status/1699789607326601638

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.