கன்னியாகுமரி அருகே 27 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவிக்கும் குடும்பம் விரைந்து தங்களுக்கு மின் இணைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டார விளை பகுதியை சேர்ந்த அமல புஷ்பம் என்பவர் இவர் தனது
96 வயது உடைய தாயார் மற்றும் மகளுடன் வசித்து வரும் நிலையில் இந்த வீட்டிற்கான
பாதை மிகவும் குறுகலானதாக உள்ளதா கடந்த 27 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் வசித்து வருகின்றனர்.
இருளில் பல ஆண்டுகளாக வசித்து வந்த தனது மகள்களும் திருமணமும் முடிந்தது நிலையிலும் மின்சாரம் எங்களுக்கு வழங்கவில்லை இனி உள்ள எங்கள் குடும்ப சந்ததிகளுக்காகவது மின் இணைப்பு தரவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நிலவு வெளிச்சத்தில் வாழ்ந்த எங்களுக்கு ,எங்கள் வீட்டிற்கு வரும் இரண்டடி பாதையில் பல மீட்டர் உயரத்திற்கு கட்டிடம் கட்டுவதால் எங்கள் வீட்டிற்கு அவசர சிகிச்சைக்காக கூட வாகனம் எதுவும் வர முடியாது. போதிய வெளிச்சம் கிடைக்காது. எனவே இது குறித்து அதிகாரி விசாரித்து மின்இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.







