பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் ரோல்: இணையத்தில் வீடியோ வைரல்! 

பச்சை மிளகாய் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் ரோல்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது.  சூரத் ஃபுட் பிளாகர்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவர்…

பச்சை மிளகாய் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் ரோல்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது. 
சூரத் ஃபுட் பிளாகர்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் இரு பச்சை மிளகாயை வெட்டுகிறார்.இதனைத்தொடர்ந்து கொத்து புரோட்டா போடுவது போல் அதனை துண்டு துண்டுகளாக மாற்றுகிறார். பின்னர் அதன்  மீது கிரீம்  ஊற்றப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஐஸ் கிரீம் ரோல்கள் தயாராகிறது. இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்த வீடியோ  17 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. அதேவேளையில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
முதலில் இன்ஸ்டாவில் டிஸ் லைக் (dis like) பட்டனை வையுங்கள். நான் இந்த வீடியோவுக்கு டிஸ்லைக் கொடுக்க வேண்டும் என சப்ஸ்கிரைபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.