#VidaaMuyarchi | நடிகர் அஜித்குமார் உடன் எஸ்.ஜே.சூர்யா! – என்னவா இருக்கும்?

நடிகர் அஜித்தை எஸ்.ஜே. சூர்யா சந்தித்துள்ள புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை…

நடிகர் அஜித்தை எஸ்.ஜே. சூர்யா சந்தித்துள்ள புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்தோடு சுனில் மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களின் ஷூட்டிங்கில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கு வாலி மூலம் திருப்புமுனை கொடுத்த இயக்குனர் எஸ் ஜே சூர்யா, அஜித்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளன. இதனால் எஸ் ஜே சூர்யா, அஜித்தோடு இணைந்து நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.