#Vettaiyan திரைப்பட ‘உச்சத்துல சூரியனா’ வீடியோ பாடல் வெளியானது!

வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உச்சத்துல சூரியனா’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வேட்டையன் படத்தில் இடம்பெற்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில்…

வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உச்சத்துல சூரியனா’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

வேட்டையன் படத்தில் இடம்பெற்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த அக்.10 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

மேலும், இப்படத்தில் பிரதானப் பாத்திரங்களில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், நடிகை மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான உச்சத்துல சூரியனா பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைத்த இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார். வேட்டையன் திரைப்படம் வரும் நவ. 8 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.