வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை பாகம் 2 படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.







