தொடர் மின்வெட்டை கண்டித்து வார்டு உறுப்பினரின் நூதன செயல்!! – திணறிய மின்வாரிய ஊழியார்கள்…

ஒரு நாளைக்கு 20 முறை மின் தடை ஏற்படுவதால்,  இதனை கண்டிக்கும் விதமாக வார்டு உறுப்பினர் ஒருவர் 9 மின் இணைப்புகளுக்கான கட்டணமான ரூ.9,737-க்கு நாணயங்களாக கொடுத்து மின்கட்டணம் செலுத்தினர். கேரளா மாநிலம்,  பத்தனாபுரம், …

ஒரு நாளைக்கு 20 முறை மின் தடை ஏற்படுவதால்,  இதனை கண்டிக்கும் விதமாக வார்டு உறுப்பினர் ஒருவர் 9 மின் இணைப்புகளுக்கான கட்டணமான ரூ.9,737-க்கு
நாணயங்களாக கொடுத்து மின்கட்டணம் செலுத்தினர்.

கேரளா மாநிலம்,  பத்தனாபுரம்,  தாளவூர் கிராம பஞ்சாயத்திலுள்ள 2 அல்லது 3-வது வார்டுகளில் ஒரு நாளைக்கு 20 முறை மின் தடை ஏற்படுவதால் இது குறித்து பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் கொடுத்தும் பலனில்லாத்தால் தனியாக போராட்டத்தில் இறங்கினார்.

இதற்காக பஞ்சாயத்து வார்டு உறுப்பினரான சி.ரஞ்சித் அவரின் வீட்டின் மின் கட்டணம் உட்பட 9 மின் இணைப்பின் கட்டணத்தை நாணயங்களாக மாற்றி சாக்கு மூட்டையில் கட்டி மின் ஊழியரிடம் நாணயங்களை கொடுத்துள்ளார். 9 இணைப்பிற்கான மின்கட்டணமான ரூ.9,737 கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:மயிலாடுதுறை: காவிரி துலா உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

மேலும்,  இதில் எவ்வளவு நாணயங்கள் உள்ளது என கூறாமல் எண்ணி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.  தலா ஒன்று,  இரண்டு,  ஐந்து மற்றும் பத்து ரூபாய் நாணயங்களை எண்ணுவதற்கு ஊழியர்களுக்கு நீண்ட நேரம் ஆனது.  இதில் மின் அலுவலகத்திலிருந்த அனைத்து ஊழியர்களும் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  

இதன் பின்னும் மின்தடை தொடர்ந்தால் அடுத்த முறை வார்டில் உள்ள பெரும்பாலான பயனாளிகளுக்கு கட்டணத்தை செலுத்த,  இதுபோன்ற நாணயங்களுடன் வருவோம் என, வார்டு உறுப்பினர் எச்சரித்தார்.

அதனை தொடர்ந்து,  யாரையும் தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்வதற்காக அல்ல,  ஆனால் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் மின்சார வாரியத்திற்கு இது நினைவூட்டுவதாக என ரஞ்சித் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.