முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கால்நடை மருத்துவப் படிப்புகள் – அக்.3 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு  அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி – ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படிப்புகளுக்கு 2022 – 23ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றவர்கள் மற்றும் அயல்நாட்டினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை’ – ஓபிஎஸ் விமர்சனம்

G SaravanaKumar

நியூசிக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேப்டனாக ரகானே நியமனம்

EZHILARASAN D

வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!

Web Editor