வேலூர் மாவட்டம் குடியாத்ததில் காதில் உயிருடன் இருந்த தேனீயால் வலியில் துடித்த இளைஞருக்கு எவ்வித பாதிப்புகளுமின்றி அதனை மருத்துவர்கள் அகற்றினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தட்டம்பாறை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராகேஷ்(20), மோகன்பாபு(19), சசிகுமார்(15) ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் அப்பகுதியிலுள்ள பாறை இருக்குகளின் இடையேயுள்ள தேனை எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தேன் கூடு திடீரென கலைந்ததால் தேனீக்கள் இளைஞர்களை விரட்டி உள்ளது. இதனால் பயந்த அவர்கள் வேகமாக அங்கிருந்து ஓடியுள்ளனர்.ஆனாலும் மூன்று பேரையும் தேனீக்கள் பலமாக தாக்கியுள்ளது.
இதில் சசிகுமார் என்ற இளைஞரின் காதில் தேனீ ஒன்று புகுந்துள்ளது. இதனால்
வலியால் அலறி துடித்த சசிகுமார் உள்ளிட்ட மூவரையும் மீட்ட அக்கம்பக்கதினர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் சசிகுமாரின் காதில் இருந்த உயிருடன் இருந்த தேனீயை மருத்துவர்கள் மாணவனுக்கு எவ்வித பாதிப்புகளுமின்றி வெளியே எடுத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
—வேந்தன்







