வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: 2,000 போலீஸார் பாதுகாப்பு

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 2000 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகின்ற 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் வெளி பாவட்டங்களை…

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 2000 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகின்ற 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் வெளி பாவட்டங்களை சேர்ந்த தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படையை சேர்ந்த சுமார் 1,800 காவலர்களும், 200 ஊர் காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

27 உயர் கண்காணிப்பு கோபுரம், 04 ஆளில்லா விமானம் ( Drone Camerவும், 760 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவகர் தெரிவித்தார்.

அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றம் மிக எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு வழக்கம்போல் பக்தர்கள் பங்கேற்புடன் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவிற்கு தேவையான முன்னேற்பாடுகளை நாகை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி பேராலய வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதி முழுவதும் வர்ணம் பூசப்பட்டு பேராலயம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.