முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளச்சேரி மறுவாக்குப் பதிவில் ஆண்களுக்கு மட்டுமே வாக்கு: தேர்தல் அதிகாரி

வேளச்சேரி மறுவாக்குப்பதிவில் ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும்  என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று சென்னை வேளச்சேரியில் மாநகராட்சி ஊழியர்கள் 3 பேர் வாக்குப்பதிவு எந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், வாக்கு எந்திரங்களை எடுத்துச் சென்றதாக ஊழியர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.  சம்பந்தப்பட்ட வேளச்சேரி தொகுதி 92ஆம் எண் வாக்குச்சாவடியில் வருகிற 17ஆம் தேதி மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்றதை போல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில், “வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 92ஆம் எண் வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி என்பதால், அப்பகுதியில் உள்ள 548 ஆண்கள் மட்டும் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வாக்குப்பதிவின்போது, வாக்காளர்களுக்கு இடது கையின் நடுவிரவில் மை வைக்கப்படும் என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

ஒரு மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தலைமை தேர்தல் அதிகாரி

Jeba

ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

Nandhakumar

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!

Karthick