ஜெனிலியாவின் கணவர் ரிதேஷ் தேஷ்முக் நடிகை ப்ரித்தி ஜிந்தாவுக்கு முத்தமிடும் காட்சி இணையத்தில் வைரலாகிறது.
தமிழ், தெலுங்கு படங்களில் சில வருடங்களுக்கு முன்னர் பிஸியாக இருந்தவர் ஜெனிலியா. அதன்பின் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியாவுடன் கலந்து கொண்டார். அப்போது நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் உரையாடிக்கொண்டு அவரது கைகளில் ரிதேஷ் முத்தமிடுகிறார். அதை ஜெனிலியா தர்மசங்கடத்துடன் பார்த்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், இச்சம்பவத்துக்கு பிறகு வீட்டிற்கு வந்ததும் என்ன நடந்தது என்பதை காமெடியாக ஜெனிலியா ஒரு வீடியோவாக பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.







