பொன்னியின் செல்வன் -2 படத்தின் அடுத்த பாடலான ‘வீரா ராஜ வீர’ பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து படக்குழு தெரிவித்துள்ளது.
மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாகப் படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தைக் காட்டிலும் கூடுதலாக இரண்டாம் பாகம் வசூலில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
From the first beat to the last, #VeeraRajaVeera is pure adrenaline!
Lyrical video from tomorrow 🔥#CholasAreBack #PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @actor_jayamravi… pic.twitter.com/fOxuS8z5Et— Lyca Productions (@LycaProductions) April 7, 2023
இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. இந்த சூழலில் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான ட்ரெய்லர், பாடல்கள் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் அடுத்த பாடலான ‘வீரா ராஜ வீர’ பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து படக்குழு தெரிவித்துள்ளது.







