தினேஷின் பிறந்த நாள் பரிசாக “வேட்டுவம்” பட கிளிம்ஸ் வெளியீடு!

நடிகர் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ”வேட்டுவம்” படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோ படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நட்ப்பில் வெளியான தண்டகாரண்யம் பசம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து  இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அட்டகத்தி தினேஷ் கூட்டணியில் வேட்டுவம் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டன் ரேடியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆர்யா, ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன், ஷபீர், ஜான் விஜய், மைம் கோபி, லிங்கேஷ், சாய் தீனா என பலரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ”வேட்டுவம்” படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.