கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் சுமார் சுமார் 61,677 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க கேரள அரசும் தேவசம் போர்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி, தினமும் அதிகபட்சமாக 80,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதில், ஆன்லைன் முன்பதிவு மூலம் 66,000 பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 14,000 பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்வதை உறுதி செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஒரு பக்தரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஐந்து பேர் வரை பதிவு செய்யலாம் என்றிருந்த நிலையை மாற்றி, ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம், ஒரு பக்தர் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் அவர் அந்த நாளில் செல்ல வேண்டும், இல்லை என்றால் அவர் இந்த மண்டல காலத்தில் பதிவு செய்ய முடியாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.




