பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானுவின் சினிமா நிறுவனம் பெயரில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தானுவின் சினிமா நிறுவனமான V Creations
நிறுவனம் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. ரஜினிகாந்தின் கபாலி, நடிகர் தனுசின் அசுரன், உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்த நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு புது முகம் தேவை என்றும், படத்தில் நடிக்க முன்பணம் செலுத்த வேண்டும் என விளம்பரம் செய்துள்ளனர். அதனை நம்பி சிலர் பணத்தையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் V Creations நிறுவனத்தை தொடர்பு கொண்ட போதுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக அந்நிறுவன இயக்குநர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பணம் அனுப்பப்பட்ட தொலைபேசி எண் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







