முக்கியச் செய்திகள் சினிமா

இந்தியிலும் வாரிசு திரைப்படம் வெளியாகும்- தயாரிப்பாளர் தில்ராஜூ

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இந்தியிலும் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு  தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு திரைப்பட ரிலீஸ் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம் என்றும் அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்திருந்தார். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் தெலுங்கிலும் வாரிசு படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஹிந்தி மொழியிலும் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். தெலுங்கு மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ இதை உறுதி செய்துள்ளார்.

வாரிசு படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியிலும் வாரிசு வெளியாகும் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகள் உயிரிழப்பு; உறவினர்கள் போராட்டம்

G SaravanaKumar

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று

G SaravanaKumar

ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ், அனிருத்!!

G SaravanaKumar