முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதார் -மின்கட்டண இணைப்பு ஏன்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ஆதார் எண்ணுடன், மின் கட்டண இணைப்பு எண்ணை ஏன் இணைக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான இன்று தமிழகம் முழுவதும் 2,811 பிரிவு அலுவலங்களிலும் சிறப்பு முகாம்களுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் இன்று முதல் 31.12.2022 வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 மணி வரை ஆதாரை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள மின் கட்டண வசூல் மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மாறுபட்ட கருத்துகள் உண்மைக்கு மாறாக பரப்பப்படுகின்றது. 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் மானியங்களும் தொடர்ந்து பின்பற்றப்படும். ஆதாரை இணைக்கும்போது மானியங்கள் இரத்தாவதாக உண்மைக்கு மாறாக பரப்பப்படுகின்றது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எவ்வளவு பேர் சொந்த வீடு, வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள் என்பதற்கான தரவுகள் மின்சார வாரியத்தில் இல்லை. வாடகைதாரர்கள் ஆதாரை இணைப்பதற்கு உரிமையாளர்கள் மறுப்பது குறித்த புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்

ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரே ஆதாரை வைத்து 10 மின் இணைப்பிலும் இணைக்கலாம். மின் இணைப்பு எண் பெயர் மாற்றாதவர்கள், அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கான வசதிகள் சிறப்பு முகாமில் ஏற்படுத்தப்படும். 2.33 கோடி மின் நுகர்வோரில் 15 இலட்சம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். மின் இணைப்பை வேறு வகைகளில் பயன்படுத்துவதை கண்டுபிடித்தால்தான் சீரமைக்க முடியும். ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். எந்தவித அச்சமும் தேவையில்லை.

மின்சார வாரியத்தில் லீக்கேஜை சரிசெய்வதற்காக தான் ஆதார் இணைப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்து ஆதாரை இணைக்க வேண்டிய அவசியமில்லை. வாய்ப்புகள் இருக்கும் போது ஏன் வெளியே போக வேண்டும்.
டிசம்பர் 31 வரை கால அவகாசம் உள்ளது. அவசரமாக ஆதாரை இணைக்க வேண்டும் என வேகப்படுத்த வேண்டியதில்லை.

1.59 லட்சம் கோடி கடன்

மின்வாரியம் தற்போது 1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இழப்புகளை சரிசெய்யவும், மேம்படுத்தவுமே ஆதார் இணைக்கப்படுகிறது. மாதந்தோறும் மின்கட்டணம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, அடுத்தடுத்து ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்தபடும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

G SaravanaKumar

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

G SaravanaKumar

சேட்டிங்கில் சீட்டிங்; தில்லாலங்கடி வாலிபர் கைது

Arivazhagan Chinnasamy