வந்தே மாதரம் மசோதா 2026 மாநிலங்களவையில் அறிமுகம்…!

மாநிலங்களவையில் இன்று வந்தே மாதரம் மசோதா எனப் அறியப்படும் தேசிய கௌரவ (திருத்த) மசோதா, 2026 அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய கீதம் போன்று வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கௌரவம் கிடைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக பாட வேண்டும் என்று அண்மையில் சுற்றறிக்கை அனுப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் வந்தே மாதரம் மசோதா எனப் அறியப்படும் தேசிய கௌரவ (திருத்த) மசோதா, 2026 அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.

இந்த திருத்தத்தின் படி 1971-ஆம் ஆண்டின் தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய கீதத்திற்குக் கிடைக்கும் அதே சட்டப் பாதுகாப்பு, வந்தே மாதரம் என்ற தேசியப் பாடலுக்கும் வழங்கப்படுகிறது. இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், வந்தே மாதரமானது தேசிய கீதத்திற்கு இணையாக வைக்கப்படும்.

இந்த மசோதாவின் அறிமுகத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நீட் தேர்வு வினாத்தால் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகள் அமளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த மசோதா அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.