வந்தே பாரத் ரயில் இயக்கம் எதிரொலி் – வைகை மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரம் மாற்றம்..!

வந்தே பாரத் ரயில் இயக்கம் எதிரொலி்யாக வைகை மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது. மதுரை – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலானது வருகிற அக்.1 ஆம்…

வந்தே பாரத் ரயில் இயக்கம் எதிரொலி்யாக வைகை மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.

மதுரை – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலானது வருகிற அக்.1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 6.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் இயக்கம் – ரயில் சேவைகளில் மாற்றம்

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் அந்த ரயிலுக்கு வழிவிடும் வகையில் 3 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

1. மதுரை – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலானது (வ.எண்.12636) வருகிற அக்.1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 6.40 மணிக்கு புறப்பட்டும்.

2. சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலானது (வ.எண்.12635) வருகிற அக்.1 ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து மதுரைக்கு 9.15 மணிக்கு வருவதற்கு பதிலாக 9.30 மணிக்கு வந்தடையும்.

3. மதுரை – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலானது (வ.எண்.16722) வருகிற அக்.1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7 மணிக்கு புறப்படும்.

மதுரை – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலானது (வ. எண்.12638)வருகிற அக்.1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து தினமும் இரவு 9.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.20 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலானது (வ.எண்.12662) வருகிற அக்.1 ஆம் தேதி முதல் செங்கோட்டையில் இருந்து 9.35 முதல் 9.55 க்கு புறப்பட்டு வந்த நிலையில் 9.35 முதல் 9.45 மணிக்குள் புறப்படவுள்ளது, அதேபோன்று சென்னையிலிருந்து மதுரைக்கு வரும்போது 4.25 முதல் 4.45 வரை 20 நிமிடம் நிறுத்தப்பட்டுவந்த நிலையில் 4.25 முதல் 4.30 மணி வரை என 5 நிமிடமே நிறுத்தப்படவுள்ளது.

இதுபோன்று சென்னையிலிருந்து, திருச்சி, திண்டுக்கல், மதுரை,நெல்லை , கோவை , கன்னியாகுமரி செல்லும் ரயில் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று சென்னையிலிருந்து, திருச்சி, திண்டுக்கல், மதுரை,நெல்லை , கோவை ,கன்னியகுமரி செல்லும் ரயில் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்களின் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது மாறாக ரயில்களின் வேகம் மாற்றம் செய்யப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.