முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய அரசை எந்தப் பெயரால் அழைத்தாலும், அதிகாரத்தை குறைக்க முடியாது: வானதி சீனிவாசன்

மத்திய அரசை எந்த பெயர் வைத்து அழைத்தாலும், அதிகாரத்தைk குறைக்க முடியாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது அறிமுகப் பேச்சை தொடங்கிய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ, வானதி சீனிவாசன், வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்குப் பாராட்டு தெரிவித்தார்.

மத்திய அரசு என குறிப்பிட்டு விட்டு சமீபகாலமாக ஒன்றிய அரசு என அழைப்பதை கண்டிப் பதாகத் தெரிவித்தார். ரோஜாப்பூவை எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும் அதன் வாசத் தை மாற்ற முடியாது என்பதைப்போல, மத்திய அரசை எந்த பெயர் வைத்து அழைத்தாலும் அதிகாரத்தை குறைக்க முடியாது என வானதி சீனிவாசன் பேசினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், குஜராத் முதலமைச்சரா க இருந்த போது மோடி எழுப்பிய கேள்விகள், முன்னுதாரணமாக உள்ளதாகக் குறிப்பிட் டார். மக்கள் பிரச்னைகளை தான் சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்றும் அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏதுமில்லை: ஹர்ஷவர்தன்

Ezhilarasan

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் நல்லடக்கம்!

Halley karthi

அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி

Saravana Kumar