முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்: முதலமைச்சர் உறுதி

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வகை செய்யும் சட்ட முன்வடிவு, நடப்பு கூட்டத் தொடரி லேயே தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கை, பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.

கட்சி பாகுபாடின்றி அனைவரும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக கூறிய மு.க.ஸ்டாலின், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நீட் விலக்கு தொடர்பாக சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து, கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என கூறினார். மேலும், தமிழ்நாட்டில் சாதகமாக உள்ள அனைத்து இடங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளரா, திமுக செயலாளரா?: கரு.நாகராஜன்

Ezhilarasan

8கி.மீ தோளில் சுமந்து எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!

டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சைகள்

Halley karthi