கோவை மக்களோடு சகோதர உணர்வோடு வளர்ச்சியில் பங்கெடுக்கும் வட மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று ரக்ஷா பந்தன் விழாவில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசினார்.
நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் கொண்டாடப்படுகிறது. இதைஒட்டி கோவையில் நடைபெற்ற பாஜக, ஆர்.எஸ். புரம் மண்டல், ரக்க்ஷா பந்தன் விழாவில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு மண்டல தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். பிற மொழி பிரிவு மாவட்ட நிர்வாகி காந்திலால் முன்னிலை வகித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசும்போது, ரக்ஷா பந்தனுக்கு மற்றொரு பெயர் சகோதரர், சகோதரி பாசம் எனப்படும். ராக்கி என்று சொல்லக்கூடிய இந்தக் கயிறை ஒருவர் கையில் கட்டி விட்டால், பாசம் நேசம் அன்பு என வாழ்நாளின் இறுதிவரை சகோதர பாசத் தோடு அவர்களுடைய உறவு தொடரும்.
கோவையில் வடமாநிலத்தில் இருந்து வருகை தந்து இங்குள்ள மக்கள் மத்தியில் இணைந்து, நன்மை தீமை வளர்ச்சி அனைத்திலும் பங்கு எடுத்து எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து வருகிறீர்கள். கொங்கு மண்டலத்தில் பல்வேறு தொழில்களை தொடங்கி தமிழகம் மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கிறீர்கள். அதற்கு வாழ்த்துக்கள்’ என்றார்.